×

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் 1.83 லட்சம் ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டுள்ளன: சுற்றுச்சூழல் துறை செயலாளர் சுப்ரியா சாஹூ தகவல்

சென்னை: தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக இந்தாண்டு 1.83 லட்சம் ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டிருப்பதாக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலர் சுப்ரியா சாஹு தெரிவித்துள்ளார். தமிழக கடலோர பகுதியில் ஆமைகளை அதிகரிக்கும் நோக்கில், அழிந்து வரும் கடல் ஆமைகளை பாதுகாக்கும் விதமாக கடந்த 2016ம் ஆண்டு முதல், வனத்துறை சார்பில் பெசன்ட் நகர் உள்ளிட்ட 3 இடங்களில் ஆமைக்குஞ்சு பொரிப்பகங்கள் அமைக்கப்பட்டன. தமிழக கடலோர மாவட்டங்களில் ஆமை முட்டையிடும் பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ள இடங்களில் ஆமை முட்டைகள் சேகரிக்கப்பட்டு, பொரிப்பகங்களில் அடைகாத்து, குஞ்சுகள் வெளியே வந்த பிறகு, கடலில் விடப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலர் சுப்ரியா சாஹூ வெளியிட்ட டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: இந்தாண்டு ஆமை முட்டையிடும் காலம் முடிவுக்கு வந்துள்ளது. இந்தாண்டு 35 ஆமை குஞ்சு பொரிப்பகங்கள் அமைக்கப்பட்டன. அங்கு குஞ்சு பொரிக்கப்பட்ட 1 லட்சத்து 83 ஆயிரம் ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டுள்ளன. கடந்த 7 ஆண்டுகளில் இது அதிகபட்ச அளவாகும். இதற்காக பணியாற்றிய தன்னார்வலர்கள் மற்றும் வன களப் பணியாளர்களின் அளப்பரிய பங்களிப்புக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் 1.83 லட்சம் ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டுள்ளன: சுற்றுச்சூழல் துறை செயலாளர் சுப்ரியா சாஹூ தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Environment ,Supriya Sahu ,Chennai ,Environment and Forest Department ,
× RELATED 3ம் ஆண்டை நிறைவு செய்த தமிழக அரசுக்கு செல்வப்பெருந்தகை வாழ்த்து